A Small Bag for a Big Change
பிளாஸ்டிக்! இந்த உயிர்க்கொல்லி பொருளின் தீமைகளைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அது நமது உலகத்தை மெதுவாக அழித்துக்கொண்டிருக்கிறது. நமது நகரங்கள்,காடுகள்,ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்கள் பிளாஸ்டிக்கால் நிரம்பியுள்ளன. விலங்குகள், மீன் மற்றும் பறவைகள் இந்த மாசுபாட்டினால் மிகவும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும்,நாமும் தினந்தோறும் இந்த பிரச்சினையை அதிகரித்துக்கொண்டே இருக்கிறோம்.
நீங்கள் பிளாஸ்டிக் பையை ஒப்புக்கொண்டால், பிரச்சினையின் ஒருபாகமாக மாறிவிடுகிறிர்கள். மளிகை சாமான்களை கொண்டு வருதல், வீட்டிற்கு காய்கறிகளை வாங்குதல், பழங்களை வாங்குதல் போன்றவற்றில் பிளாஸ்டிக் பேகுகளின் பயன்பாட்டை அழிக்க இயலவில்லை. துரதிருஷ்டமான முறையில், இந்த பேகுகளை மறுமுறை பயன்படுத்த இயல்வதில்லை மற்றும் அவ்வாறு பயன்படுத்தினாலும் கூட இறுதியில் அவை குப்பைகளாக வெளியிலே தான் தூக்கியெறியப்படுகின்றன. மேலும் அதிலிருந்துதான், கற்பனை செய்ய இயலாத அளவிற்கு ஆபத்தை விளைவிக்கும்பயணம் தொடங்குகிறது!
இப்போது உங்களிடம் அதற்கான தீர்வு உள்ளது நீங்கள் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம் உங்களுக்கென சொந்தமாக துணியாலான ஷாப்பிங் பேகை உருவாக்குதவன் மூலம் பிளாஸ்டிக்கிற்கு ‘நோ’(வேண்டாம்)’ என கூறலாம்.
கவலை வேண்டாம்! நாங்கள் அதனை எளிதாக்கியுள்ளோம் மேலும் அதை செய்வதில் நீங்கள் மகிழ்ச்சிகொள்வீர்கள்
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முதலில் www.ushasew.com க்கு தையல் பாடங்களுக்கு சென்று வீடியோக்களை. காணத் தொடங்குவதுதான். அதில் அனைத்து குறிப்புகளும் அடங்கியுள்ளன மற்றும் ஒவ்வொரு படியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
படிகள் பின்பற்ற மிகவும் எளிமையாக உள்ளன. சில துணிப்பகுதிகள், சில ரிப்பன்கள்மற்றும் உஷா தையல் இயந்திரங்களுடன் சில மணித்துளிகளிலேயே நீங்கள் ஷாப்பிங் பேகை தயாராக்கலாம்.
உங்களுக்கு ஏதேனும் புள்ளிகள் புரியவில்லை எனில் முந்தைய பாடங்களுக்கு தயவுசெய்து செல்லவும் இந்த ஒவ்வொரு பாடங்களும் தையலை விரிவாக புரிந்துகொள்ள உதவும்… மேலும் நீங்கள் எவ்வாறு நேர்வரிசையில் தைப்பது, வளைவுகளை பின்பற்றுவது, ஹெம் பொருட்களை பயன்படுத்துவது மற்றும் மீதியுள்ள மற்ற விஷயங்களையும் கற்றுக்கொள்ளலாம்.
உங்களின் ஷாப்பிங் பேகை உருவாக்கும்போது உங்கள்படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறனை பயன்படுத்தவும் வீடியோக்கள் ஒரு வடிவமைப்பை எவ்வாறு தைக்க வேண்டும் என காட்டும், னால் நீங்கள் அடிப்படை வடிவலிருந்து உங்கள் சொந்த வடிவமைப்புகளுடன் விளையாடத்தொடங்கலாம்
தயவுசெய்து பல ஷாப்பிங் பேகுகளை உருவாக்கவும் மற்றும் அவற்றை உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுக்கும் பரிசாக அளித்து மகிழுங்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துணியாலான ஷாப்பிங் பேகும் நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் பேகுகளை அகற்றுகிறது. அதானல், நீங்கள் அதிகமாக உருவாக்க உருவாக்க, நமது எதிர்காலம் நன்றாக, பிரகாசமானதாக மற்றும் சுத்தமானதாக மாறப்போகிறது.