Privacy Policy
உஷா இண்ட்டர்நேஷனல் லிமிட்டெட் (“UIL” அல்லது” நாங்கள்” அல்லது ” எமது” அல்லது ” நமது”) சொந்தமாக www.usha.com (” வலைதளம்”) வைத்து இயக்குகிறது. உபயோகிப்போரின் (நீங்கள், உங்களுடைய) அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்தை நாங்கள் உணர்ந்து மதிக்கிறோம். எமது பிஸினஸ் தொடர்பாக சேவை வழங்கும்போது உங்களிடம் இருந்து பெறும், திரட்டும், உடமையாக்கும், பயன்படுத்தும், பரிசீலிக்கும், பதிவு செய்யும், சேர்த்து வைத்திருக்கும், மாற்றித் தரும், வெளியிடும், டீல் செய்யும், கையாளும், தனிப்பட்ட தகவல்கள் அல்லது தரவுகளின் அந்தரங்கத் தன்மையை பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதற்கு ஏற்ப, பல்வேறு வழிகாட்டு விதிகளுடன் கூடிய எமது அந்தரங்கத் தகவல் கொள்கை நாங்கள் மேற்கண்ட முறையில் பெற்றுப் பயன்படுத்தும் தகவல்களை எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம் என்பதை தெரிவிக்க்கிறது. தற்போதுள்ள 2000-மாவது ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அதன்கீழ் உரியவிதிகளின்படி, இந்த அந்தரங்கத் தகவல் கொள்கை அமைந்துள்ளது.
இந்தக் கொள்கையின் வரம்பும், பயன்பாடும்
இந்த அந்தரங்கத் தகவல் கொள்கை UIL, அதன் சார்பு மற்றும் துணைக் கம்பெனிகள், அதன் ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் உங்களிடம் இருந்தும் இந்தியாவில் உள்ள மூன்றாவது தரப்பினரிடம் இருந்தும் தகவல்களைச் சேகரிக்கும், வைத்திருக்கும், பயன்படுத்தும், பதிவு செய்யும், சேர்த்து வைக்கும், பரிமாற்றம் செய்யும், வெளிப்படுத்தும், கையாளும் மற்றும் பெறும் டீம் உறுப்பினர்கள் ஆகியோருக்குப் பொருந்தும். இவர்களில் UIL-இன் கன்சல்டண்ட்ஸ், காண்ட்ராக்டர்கள், ஆலோசகர்கள், அக்கவுன்டன்ட்டுகள், ஏஜண்டுகள், நபர்கள், பிரதிநிதிகள் மற்றும்/ அல்லது UIL நிறுவனத்திற்கு அல்லது அதன் சார்பாக மூன்றாவது தரப்பு பிஸினஸ்காரர்களுக்கு சர்வீஸ் வழங்குவோர் அடங்குவர். உங்களைப் பற்றி எந்த மாதிரியான தகவல் (இங்கு வரையறுக்கப்படுகிறது) திரட்டப்படுகிறது, எந்த நோக்கம், சேகரித்து வைப்பது, பயன்படுத்துவது, யாருக்கு இத்தகைய தகவல் தெரிவிக்கப்படலாம்./ பரிமாற்றம் செய்யப்படலாம் என்பதும், உங்கள் அந்தரங்கத்தை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதையும் கொள்கை விவரிக்கிறது.
குறிப்பு: எமது அந்தரங்கத் தகவல் கொள்கை எந்த நேரமும் முன்னறிவிப்பின்றி மாறக்கூடியது. எந்த ஒரு மாற்றத்தையும் நீங்கள் தெரிந்து கொள்வதற்காக அடிக்கடி வலைதளத்திற்கு வந்து கொள்கையைப் பாருங்கள். வலைதளத்தைப் பார்ப்பதன் மூலம் கொள்கையின் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். ஒப்புக் கொள்ளாவிடில் வலைதளத்தை பார்க்காதீர்கள். வலைதளத்தை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்த அந்தரங்கத் தகவ்வல் கொள்கைக்கு ஏற்ப உங்களின் தகவல்களை வெளியிட சம்மதம் தெரிவிக்கிறீர்கள். இந்தக் கொள்கை பயன்பாட்டு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாங்கள் சேகரிக்கும் அந்தரங்கத் தகவல் அல்லது டேட்டாவின் வகைகள்
அந்தரங்க டேட்டா அல்லது தகவல் & கோட் என்பது: (தகவல்) இந்தக் கொள்கையில் உங்களை அடையாளப்படுத்தும் மற்றும்/ அல்லது உங்களை ஒரு தனிநபராக அடையாளப்படுத்தக்கூடிய திறனை அந்தரங்கத் தகவல் குறிக்கிறது. நாங்கள் சேகரிக்கக்கூடிய இது போன்ற தகவலில் நீங்கள் தொடர்பான பின்வரும் அந்தரங்கத் தகவல் அடங்கியிருக்கும்:
- பெயர்:
- முகவரி
- மொபைல் எண்
- ஐபி முகவரி
- மின்னஞ்சல் முகவரி
- மேற்கண்ட வகை தொடர்பான எந்த ஒரு விவரமும் எங்களுக்குச் சேவை வழங்குவதற்காக நீங்கள் எங்களுக்குத் தருவது.
பொது தளங்களில் தாராளமாகக் கிடைக்கும் அல்லது பெறக்கூடிய அல்லது 2005 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அல்லது அவ்வப்போது அமலில் உள்ள வேறு சட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய எந்த ஒரு தகவலும் இந்தக் கொள்கையின் நோக்கத்திற்கான தகவலாகக் கருதப்பட மாட்டாது.
மேலும், உங்களுடைய தகவல் வேறு எந்த ஒரு மூன்றாவது நபருக்கும் தெரிவிக்கப்படாது. ஆனால், அந்த மூன்றாவது நபர் உங்களுக்கு தேவையான சேவையை வழங்குவதற்கும் மற்றும்/ அல்லது எந்த ஒரு நபரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தடுக்க, புலன்விசாரணை செய்ய தேவைப்படக்கூடிய நடவடிக்கைகள், சந்தேகத்திற்குரிய மோசடி, வலைதள விதி மீறல் அல்லது சட்டபூர்வ கிளெய்ம்களுக்கு எதிராகப் பாதுகாக்க வேண்டியது, சட்ட அமலாக்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு / ஆணைக்கு, நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க மூன்றாவது நபருக்குத் தேவைப்படும் இத்தகைய தகவல்கள் தெரிவிக்கப்படும். நீங்கள் வழங்கும் தகவல்கள் தொகுக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக பரிசீலிக்கப்படும். உங்களுடைய அந்தரங்க உரிமைகளை நாங்கள் மதிக்கிறோம் என்பதால், தகவல்களைத் திரட்டுதல், பெறுதல், வைத்திருத்தல், பயன்படுத்துதல், பரிசீலித்தல், பதிவு செய்தல், ஸ்டோர் செய்தல், பரிமாற்றம் செய்தல், கையாளுதல், தெரிவித்தல் போன்றவை தொடர்பாக நாங்கள் பின்வரும் வழிகாட்டி விதிகளைப் பின்பற்றுவோம்:
- தகவல்களை இந்தியச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு திரட்டுதல், பெறுதல், வைத்திருத்தல், பயன்படுத்துதல், பரிசீலித்தல், பதிவு செய்தல், ஸ்டோர் செய்தல், பரிமாற்றம் செய்தல், கையாளுதல், தெரிவித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்;
- தகவல்கள் குறிப்பான, சட்ட மற்றும் நியாயமான நோக்கங்களுக்காகத் திரட்டப்பட்டு, அவை எந்த நோக்கத்திற்காகத் திரட்டப்பட்டதோ, அதற்காகப் பயன்படுத்தப்படும்;
- எந்த நோக்கத்திற்காகத் தேவையோ அதற்குப் பொருத்தமான/ தேவையான தகவல்கள் திரட்டப்பட்டு, பயன்படுத்தப்படும்;
- தகவல்கள் திரட்டப்பட்டு, வைத்திருக்க வேண்டிய நோக்கத்திற்காக எவ்வளவு காலம் தேவையோ அவ்வளவு காலத்திற்கு மட்டுமே தகவல் வைத்திருக்கப்படும்;
- இத்தகைய தகவல்களை அங்கீகாரமின்றி அடைதல் அல்லது பயன்படுத்துதல், சட்டவிரோதமாக வைத்திருத்தல், மற்றும் அங்கீகாரமின்றி அல்லது தற்செயலாக தொலைத்தல், சேதப்படுத்துதல் அல்லது அழித்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதற்குத் தேவையான பொருத்தமான பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அந்தரங்கத் தகவல் அல்லது டேட்டா சேகரித்து, சேர்த்துவைத்து மற்றும்/ அல்லது பயன்படுத்துவதன் நோக்கம்
தகவலைச் சேகரித்து, சேர்த்து வைத்து மற்றும்/ அல்லது பயன்படுத்துவதன் முதன்மை நோக்கம்:
- நீங்கள் எங்களிடம் இருந்து பெற்ற புராடக்டுகளுக்கு ஆதரவு வழங்குதல், எமது பிஸினஸ் நடைமுறை, பிஸினஸ் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் மேலாண்மை, சேவைகளின் ஆப்பரேஷன், எந்த ஒரு காண்ட்ராக்டும் செய்து கொள்வது அல்லது செயல்படுத்துதல், சர்வீஸ்களின் தரத்தைப் பராமரித்தல்:
- ஆர்டர்(களை) பரிசீலனை செய்வது, உங்களுடன் தொடர்பு கொள்ளுதல், உங்களுடைய பரிமாற்ற வேண்டுகோள்களை நிறைவேற்றுதல், நீங்கள் கேட்டுக்கொண்ட புராடக்டுகளை டெலிவரி செய்தல்:
- நீங்கள் எங்களிடம் கோரிய அல்லது உங்களுக்கு ஆர்வமாக இருக்கலாம் என நாங்கள் நினைக்கும் புராடக்டுகள் அல்லது தகவலை வழங்குதல், ஆவணங்களை பராமரித்தல், மற்றும் இதர பொது நிர்வாக மற்றும் சர்வீஸ்கள் தொடர்பான நடைமுறைகள்
- எமது உரிமைகளை அல்லது சொத்துக்களை அல்லது எமது பிஸினஸைப் பாதுகாத்தல்:
- பொருத்தமான சட்டத் தேவைகளுக்கு கட்டுப்படுதல், அரசுக்குத் தெரிவித்தல் மற்றும் உரிய சட்டங்களின் கீழ் சட்டபூர்வ கடமைகளை நிறைவேற்றுதல், நீதி அல்லது நிர்வாக ஆணைகளைப் பின்பற்றுதல், சட்டவிதிகளுக்குக் கட்டுப்படுதல்:
- நடப்பு சேவைகள் அல்லது நாங்கள் உங்களுக்கு வழங்கக்கூடிய புதிய சேவைகள் பற்றி உங்கள் கருத்தை அறிவதற்காக சர்வேக்கள் மூலமாக உங்களைத் தொடர்பு கொள்ளுதல்:
- நீங்கள் எங்களை அழைத்தல் அல்லது நாங்கள் உங்களை அழைத்தல் தொடர்பான சிலவகை கால்கள், உரையாடல்கள் மற்றும் இதர கலந்துரையாடல்கள் அல்லது பணியாளர் பயிற்சிக்காக அல்லது குவாலிட்டி உத்தரவாதத்திற்காக ஆன்லைன் உரையாடல்கள் அல்லது குறிப்பிட்ட பரிமாற்றம் பற்றிய சான்றை அல்லது கலந்துரையாடலை தக்க வைத்தல்:
- அன்றாட அலுவல்களை/ ஆப்பரேஷன்களை நடத்தும்போது எங்களுடைய சார்பு நிறுவனங்களுக்கும், கம்பெனிகளுக்கும்,எமது ஊழியர்கள்/பணியாளர்களுக்கும், மூன்றாவது தரப்பினருக்கும், எமக்காக அல்லது எங்கள் சார்பாக புள்ளிவிவர மதிப்பீடு செய்வதிலும், உங்களுக்கு மின்னஞ்சல் அல்லது சாதாரண அஞ்சல் அனுப்பவும், கஸ்டமர் ஆதரவு தரவும், புரொகிராம்கள், புராடக்டுகள், தகவல்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றை டெலிவரி செய்வதற்கு ஏற்பாடு செய்யவும் உதவியாக இத்தகைய தகவல்களைத் தரவேண்டியிருக்கலாம்;
- நேரடி மார்க்கெட்டிங் மற்றும் புரோமோஷனல் நோக்கங்கள்:
- உங்களுக்கு மேம்பட்ட புராடக்டுகள் மற்றும்/ அல்லது சேவைகளை வழங்கிட வலைதளங்களை இயக்குதல், வலைதள உள்ளடக்கத்தை மேம்படுத்துதல், உங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் வலைதளத்தில் இருந்து உள்ளடக்கத்தை வழங்குதல்: மற்றும்
- எமது சர்வரில் பிரச்சினைகளைக் கண்டறியவும், எமது வலைதளத்தை நிர்வகிக்கவும் உதவியாக உங்களை அடையாளம் காணவும், ஆட்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும்; மற்றும் எமது பிஸினஸ் தொடர்பாகவும் உங்களின் ஐபி முகவரி பயன்படுத்தப்படுகிறது
டேட்டா திரட்டும் சாதனங்கள்
தகவல்களோடு, நாங்கள் ”குக்கீஸ்” போன்ற டேட்டா சேகரிக்கும் சாதனங்களை அல்லது உங்களுடைய பிரவுஸர் எமது வலைதளத்தை அடையும்போது சில வகை தகவல்களைப் பெறுவதற்காக இதர தொழில்நுட்பங்களை பயன்படுத்தக்கூடும். குக்கீஸ் என்பது உங்களுடைய பிரவுஸரை அடையாளம் காண்பதற்காக தொடர்ச்சியாகப் பல கேரக்டர்களைக் கொண்டுள்ள சிறு ஃபைல்களாகும். நீங்கள் எமது வலைதளத்தைப் பார்வையிடுவதை அதிகம் பயனுள்ளதாக ஆக்கிட சில முக்கியமான டேட்டா அல்லது தகவல்களை நினைவில் வைக்க குக்கீஸ் உதவுகின்றன. ஒரு அமர்வின்போது நேவிகேஷனை விரைவுபடுத்தவும், ஐட்டம்களைத் தொடரவும், எமது வலைதளத்தை மேம்படுத்தவும், மார்க்கெட்டிங் மற்றும் புரோமோஷனல் நோக்கங்களுக்காகவும் நாங்கள் பயன்படுத்தக்கூடிய இனம்தெரியாத டிராஃபிக் டேட்டாவை சேகரிக்கவும் யூஸர் தகவல்களை சேர்த்து வைப்பதற்காக எமது வலைதளம்ம் குக்கீஸ் மற்றும் இதர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக்கூடும். மேலும், ஒரு அமர்வின்போது நீங்கள் உங்களுடைய பாஸ்வேர்டை குறைவான தடவைகள் பயன்படுத்தும் வகையிலும் நாங்கள் குக்கீஸை பயன்படுத்துகிறோம். உங்களுடைய நலன்களுடன் தொடர்புடைய தகவல்களை மட்டும் இலக்காகக் கொள்ளவும் குக்கீஸ் உதவும். பெரும்பாலான குக்கீஸ்கள்Ԇ செஷன் குக்கீஸ்களாகԆԆ உள்ளன. அதாவது, அமர்வின் முடிவில் அவை தாமாகவே உங்களின் ஹார்டு டிஸ்கில் இருந்து அழிந்து விடும். உங்களுடைய பிரவுசர் அனுமதிக்குமானால் நீங்கள் எமது குக்கீஸ்களை நிராகரிக்கலாம். ஆயினும், அப்படி நிராகரிக்கும்போது, நீங்கள் வலைதளத்தில் சில அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். ஒரு அமர்வில் நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை அதிகத் தடவைகள் ரீ என்ட்டர் செய்ய வேண்டியிருக்கலாம். குக்கீஸ்களை நிராகரிக்க அல்லது அவை அனுப்பப்படும்போது உங்களை எச்சரிக்க நீங்கள் உங்கள் பிரவுசரை ரீசெட் செய்யலாம்.
உங்களுடைய கம்ப்யூட்டர் சிஸ்டம்கள் பயன்படுத்தப்படுவதை ரிஜிஸ்டர் செய்திட நாங்கள் எமது உள் நெட்வொர்க்கில் லாகிங் சிஸ்டம்களை பயன்படுத்துகிறோம். இந்த சிஸ்டம்களின் செயல்பாடு, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திட இவ்வாறு செய்யப்படுகிறது. ஆராய்ச்சி நோக்கிற்காக, எமது விசிட்டர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் இருந்து பெறும் புள்ளிவிவர அளவையும், அங்கீகாரமற்ற பயன்பாட்டையும் தேடிக் கண்டறிந்து மதிப்பிட நாங்கள் மூன்றாவது தரப்பினருடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். இத்தகைய தகவல்கள் அங்கீகாரமற்ற, மொத்த அடிப்படையில் மட்டுமே புறவெளியில் பகிரப்படுகின்றன. இத்தகைய மூன்றாவது தரப்பினர் குக்கீஸ்களைப் பயன்படுத்துவது எங்களுக்கு விசிட்டர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், எமது வலைதள உள்ளடக்கத்தை நிர்வகிக்கவும், விசிட்டர்களின் பழக்கவழக்கங்களை கண்காணிக்கவும் உதவுவர். இத்தகைய மூன்றாவது தரப்பினரால் எமது சார்பாக, திரட்டப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் டேட்டாக்கள் எங்களால் மட்டுமே அல்லது எங்கள் சார்பாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு, அங்கீகாரமற்ற, மொத்த அடிப்படையில் மட்டுமே புறவெளியில் பகிரப்படுகின்றன.
எமது வலைதளத்தில் ஆப்பரேஷனல் எர்ரர்கள் எதுவும் இல்லை என்றும், வைரஸ் எதுவும் கிடையாது என்றும், கம்ப்யூட்டர் மாசற்றது, வேர்ம்கள் அல்லது இதர ஆபத்தான பாகங்கள் இல்லாதது என்றும் நாங்கள் உத்தரவாதம் தரமுடியாது. ஆனால் அதற்கு சிறந்த முயற்சிகளை மேற்கொள்வோம்.
எமது சைட், அதன் சர்வீஸ் மற்றும் உள்ளடக்கம் ”அவை இருக்கும் நிலையில்” மற்றும் ”அவை கிடைக்கும் நிலையில்”, எந்த விதமான வாரண்ட்டியும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இல்லாமல் வழங்கப்படுகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு சர்வீஸும் தடங்கலாகும், உரிய நேரத்தில் கிடைக்கும், பாதுகாப்பாக இருக்கும் அல்லது எர்ரர் இல்லாதிருக்கும் என்பதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்கமுடியாது. ஓவர்லோடு/ ரிஸீவிங் நெட்வொர்க், சர்வர்கள் அல்லது அப்ளிகேஷன்களின் பிரேக்டவுன்; எமது கட்டுப்பாட்டை மீறிய சிஸ்டம் கோளாறு அல்லது நெட்வொர்க்கில் ஏராளமான டிராஃபிக் ஆகியவற்றால் இவை ஏற்படலாம்.
உங்கள் தகவல்களை தெரிவித்தல் அல்லது பரிமாற்றம் செய்தல்
உங்கள் தகவல்களை இந்த பாலிசி மற்றும் அனைத்து சட்டபூர்வ தேவைகளுக்கு இணங்க நாங்கள் தெரிவிப்போம் அல்லது பரிமாறுவோம். அவ்வப்போது பின்வரும் அடிப்படையில் உங்கள் தகவல்கள் தெரிவிக்கப்படும் அல்லது பரிமாறப்படும்:
- பிஸினஸ் நோக்கங்கள்: (i) எமது அலுவலகத்தில் உள்ள உரிய ஊழியர்கள்/ பணியாளர்களுக்கு: (ii) எமது சார்பு அல்லது இணை கம்பெனிகளுக்கு: (iii) இந்தியாவிற்கு உள்ளும், வெளியிலும் உள்ள எமது வெவ்வேறு அலுவலகங்களுக்கு ஐடி சட்டத்துக்கு உட்பட்டு: (iv) உத்தேச அல்லது உண்மையில் பிஸினஸ் மாற்றம் நிகழும்போது எந்த ஓரு மூன்றாவது தரப்புக்கு : (v) எமது பிஸினஸ் மற்றும் நாங்கள் வழங்கும் சர்வீஸ்கள் தொடர்பாக.
- மூன்றாவது தரப்புக்கு: எங்களுடன் அல்லது எங்கள் சார்பாக வெவ்வேறு தொழில்துறைகளில் மற்றும் பிஸினஸ் பிரிவுகளில் பணீயாற்றுவோர். எமது பிஸினஸ் தேவைகள் தொடர்பாக அல்லது இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக உங்கள் தகவல்களை நாங்கள் எந்த ஓரு மூன்றாவது தரப்பினருக்கு தெரிவிப்போம், பகிர்வோம், மாற்றித் தருவோம் அல்லது வழங்குவோம். இத்தகைய மூன்றாவது தரப்பு எங்களிடம் இருந்து பெறும் உங்கள் தகவல்களை சட்டப்படி, பாதுகாப்பாக, இந்த பாலிஸிக்கு ஏற்ப பொறுப்பான முறையிலும், தற்போதுள்ள சட்டவிதிகளுக்கு உட்பட்டும், பொருத்தமான பாதுகாப்பு மற்றும் ரகசியக் காப்பு நடவடிக்கைகளுடனும் பரிசீலிக்கலாம். அவை உங்கள் தகவல்களை சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது அல்லது மற்றவர்களுக்கு தெரிவிக்கக் கூடாது, நாங்களோ, மூன்றாவது தரப்பினரோ உங்கள் தகவல்களை வெளியிட மாட்டோம்.
- சட்டப்படியான தேவைகளுக்காக: எந்த ஒரு நீதிமன்றத்திற்கும் மற்றும்/ அல்லது அரசு முகமைகள்/ நிறுவனங்களுக்கும் சட்டப்படி மற்றும்/ அல்லது சட்ட ஆணையத்திற்கும், இந்திய ரிசர்வ் வங்கி, கிரெடிட் இன்ஃபர்மேஷன் பிரோ இந்தியா லிட்( ԅԆCIBILԆԆ) அல்லது சட்ட நடவடிக்கைக்கு ஏற்ப அடையாளத்தை சரிபார்க்கவும், அல்லது கணிணி குற்றங்களைத் தடுக்க, கண்டுபிடிக்க, புலனாய்வு செய்ய, வழக்குத் தொடுக்க , குற்றங்களுக்கு தண்டனை வழங்கிட மற்றும்/ அல்லது எந்த ஒரு மூன்றாவது தரப்பிற்கும் உரிய சட்ட ஆணைப்படி அல்லது தேவை அல்லது சட்ட விதிகளுக்கு, சட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதற்கு, அரசின் வேண்டுகோளுக்குத் தேவை என நாங்கள் கருதினால் அல்லது எமது உரிமைகளை, சொத்து உரிமைகளைப் பாதுகாக்க அல்லது தற்காத்துக் கொள்ள, அக்கவுன்டிங் மற்றும் வரிவிதிப்பு விதிகளுக்கும், ஒழுங்குமுறைகளுக்கும் இணங்க அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள், சந்தேகத்திற்குரிய மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்க, அல்லது பாதுகாப்பு அல்லது டெக்னிக்கல் பிரச்சினைகள் அல்லது எந்த ஒரு நபரின் உடலுக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் வழங்கப்படும்.
- மையப்படுத்தப்பட்ட டேட்டா புராஸஸிங் நடவடிக்கைகள்: எமது டேட்டா புராஸஸிங் மற்றும் நிர்வாகத்தின் சில அம்சங்களை எமது பிஸினசை மேம்பட்ட வழியில் நிர்வகிப்பதற்காக நாங்கள் மையப்படுத்தியிருக்கிறோம். இவ்வாறு மையப்படுத்தியதால் உங்கள் தகவல்கள் (i) ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு, (ii) எமது ஊழியர்கள்/ சார்பு நிறுவனங்களின்/மற்ற இடங்களில் உள்ள UIL நிறுவனத்தின் இணை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு மாற்றித் தரப்படலாம். எனினும், UIL நிறுவனத்திற்குள் உங்கள் தகவல் பரிமாறப்படுமானால் அது இந்த பாலிசியின் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்தப்படும்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்
எமது கட்டுப்பாட்டில் உள்ள தகவல்கள் தொலையாமல் இருக்க, தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க, திருத்தப்படாமல் இருக்க நாங்கள் எமது வலைதளத்தில் கண்டிப்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை வைத்திருக்கிறோம். உங்களுடைய அக்கவுண்ட் தகவலை நீங்கள் மாற்றும் போது எல்லாம், அல்லது அடையும்போது எல்லாம், நாங்கள் ஒரு பாதுகாப்பான செர்வரை வழங்குவோம். உங்களுடைய தகவல் எங்கள் வசம் வந்துவிட்டால், நாங்கள் கண்டிப்பான பாதுகாப்பு வழிகாட்டு விதிகளைப் பின்பற்றி, அதை யாரும் அங்கீகாரமின்றி அடைய முடியாமல் பாதுகாக்கிறோம். உங்களுடைய தகவல்கள் அங்கீகாரமின்றி அடைவதை, திருத்தப்படுவதை, வெளியிடப்படுவதை, அல்லது அழிக்கப்படுவதை தடுத்துப் பாதுகாக்க நாங்கள் பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்போம்.
உங்களுடைய தகவல்களை எமது டீம் உறுப்பினர்கள்/ எமது ஊழியர்கள்/ தங்களது கடமையைச் செய்வதற்காக இந்தத் தகவல் தேவை என நாங்கள் நம்பக்கூடிய மூன்றாவது தரப்பினர் ஆகியோருக்கு மட்டும் உங்கள் தகவல் கிடைப்பதை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். இத்தகைய உறுப்பினர்கள்/ எமது ஊழியர்கள்/ மூன்றாவது தரப்பினருக்கு கண்டிப்பான ரகசியக் காப்பு பொறுப்புக்களை அளித்திருக்கிறோம்.
உங்கள் தகவலை தக்க வைப்பது
தகவலை உரிய நேரத்தில் அழிப்பதன் முக்கியத்தை நாங்கள் அறிந்திருக்கிறோம். உங்கள் தகவல் சட்டப்படியான தேவையைத் தவிர்த்து, அதன் பயன்பாட்டு தேவையை விட அதிகமாக நீண்ட காலத்திற்கு சேர்த்து வைக்கப்படுவதை/ தக்க வைக்கப்படுவதை , பயன்படுத்தப்படுவதை அல்லது பரிசீலிக்கப்படுவதை தடுக்க நாங்கள் உறுதி செய்வோம். உங்கள் தகவல் திரட்டப்பட்டதன், பயன்படுத்தப்பட்டதன், அல்லது பரிசீலிக்கப்பட்டதன் நோக்கத்திற்குப் பிறகு கூடியவிரைவில் அழித்து விடுவது எமது பழக்கமாகும். இதற்கு மேலே குறிப்பிடப்பட்ட சில விதிவிலக்குகள் உண்டு.
உங்கள் அந்தரங்க டேட்டா அல்லது தகவல்/ கேள்விகள் அல்லது புகார்களை அப்டேட்டிங் அல்லது மறு ஆய்வு செய்தல்
நீங்கள் வழங்கிய தகவலை எந்த நேரத்திலும் மறு ஆய்வு செய்யலாம். உங்கள் தகவலில் நீங்கள் செய்த மாற்றங்களை கூடிய விரைவில் சேர்த்துக் கொள்ள நாங்கள் ஏற்பாடு செய்வோம்.
எங்களுக்கு நீங்கள் வழங்கிய தகவல் சரியானது என்றும், எல்லா வகையிலும் முழுமையானது என்றும், பொய்யான, திரிக்கப்பட்ட, மாற்றப்பட்ட, மோசடி செய்யப்பட்ட அல்லது திசைதிருப்பும் அம்சங்கள் இல்லை என்றும் நீங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் எங்களுக்கு வழங்கியுள்ள டேட்டா அல்லது தகவலினால் எழக்கூடிய எந்த ஒரு நிலைமைக்கும் நாங்கள் பொறுப்பல்ல என்பதை வெளிப்படையாகக் கூறுகிறோம். மேலும், நீங்கள் எங்களுக்கு வழங்கியுள்ள டேட்டா அல்லது தகவலின் உண்மைத் தன்மை மற்றும் துல்லியமான தன்மைக்கு நாங்கள் பொறுப்பல் என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் UIL-க்கு வழங்கிய பொய்யான, திரிக்கப்பட்ட, மாற்றப்பட்ட, அவதூறான, தண்டனைக்குரிய, அசிங்கமான, முறைகேடான அல்லது தவறாகத் திருப்பிவிடக்கூடிய தகவலினால் ஏற்படக்கூடிய இழப்பில் இருந்து UIL நிறுவனத்திற்கு விலக்களிக்க நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள்.
அமலாக்க உரிமைகள்
எங்களின் எல்லா அஃபிலியேட்டுகள் / குரூப் கம்பெனிகள் இந்த கொள்கை கடைபிடிக்கப்படுவதை நிச்சயப்படுத்தும். எங்களின் அனைத்து ஊழியர்கள் / அலுவலர்கள் மற்றும் இன்ஃபோவை அக்ஸஸ் செய்யக் கூடிய மூன்றாம் தரப்பினர் இந்த பாலிஸியை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.
எல்லா மூன்றாந் தரப்பினரும், எங்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப மட்டுமே இன்ஃபோவை பிராஸஸ் செய்ய முடியும், அல்லது அவர்களின் சர்வீஸ்களின் ஒரு பாகமாக அத்தகைய டேட்டா அல்லது தகவல்களைப் பொறுத்த மட்டில் முடிவெடுக்க முடியும். இந்த இரு நிகழ்வுகளிலும், அத்தகைய டேட்டா அல்லது தகவல்களை போதுமான அளவில் பாதுக்காக்கப்படுவதை நிச்சயப்படுத்தவதற்காக கான்ட்ராக்ட் அல்லது சட்டபூர்வமாக கட்டுப்படுத்தும் மற்றும் அனுமதிக்கக் கூடிய வழிகளில் உரிய டெக்னிகல் மற்றும் நிர்வாக பாதுகாப்பை நடைமுறைப் படுத்தக் கூடிய அதற்கு உரிய பொறுப்பை எடுத்துக் கொள்ளக் கூடிய, நம்பகமிக்க தேர்ட் பார்ட்டியை மட்டுமே நாங்கள் தேர்வு செய்வோம். அவ்வாறு நாங்கள் தேர்வு செய்துள்ள தேர்ட் பார்ட்டி, இந்த பாலிஸியின் நியதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் அல்லது, அத்தகு டேட்டா அல்லது தகவல்களை கையாளும்போது, எங்களால் கடைபிடிக்கப்படும் அதே அளவிலான டேட்டா பாதுகாப்பு கடைபிடிக்கப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்ட் பார்ட்டி, பொருந்தக்கூடிய சர்வீஸ் கான்ட்ராக்டில் குறிப்பிட்டுள்ள சர்வீஸ்களை மேற்கொள்வதற்காக மட்டுமே அத்தகைய டேட்டா அல்லது தகவலை அக்ஸஸ் செய்ய முடியும். அதோடு அவர்களுக்கு ஷேர் செய்யப்படும் அத்தகைய டேட்டா அல்லது தகவல்களின் ரகஸியக்காப்பை பத்திரமாக பாதுகாப்பதோடு அவற்றை மேற்கொண்டு வேறு யாருக்கும் தெரிவிக்க கூடாது என்பதற்கு அவர்கள் சட்டபூர்வமாகவும் ஒப்பந்தத்தின்படியும் கட்டுப்பட வேண்டும். இந்த பொறுப்புகளை நிறைவு செய்யாமலிருக்கும் தேர்ட் பார்ட்டிக்கு எதிராக அவ்வாறு நியதிகளை பூர்த்தி செய்யாமல் இருப்பதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுப்போம் அல்லது தேவையான ஸாங்க்ஷன்களை நடைமுறைப்படுத்துவோம்.
இதற்கும் கூடுதலாக , எங்கள் டீம் மெம்பர்கள்/ ஊழியர்கள்/ அலுவலர்கள் உள் அந்தரங்க பாலிஸிகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். இந்த பாலிஸிக்கு அல்லது வேறு இதர பாலிகளுக்கு புறம்பாக யாராவது டீம் மெம்பர்/ ஊழியர்/ அலுவலர் நடப்பது தெரிய வந்தால், அவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடவடிக்கையில் வேலை நீக்கம் வரை மற்றும் / அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் அபராதமும் விதிக்கப்படுவதும் உள்ளடங்கும்.
எல்லா மூன்றாம் தரப்பு பார்ட்டி மற்றும் எங்கள் டீம் மெம்பர்கள்/ ஊழியர்கள் / அலுவலர்கள் இதன் மூலம் குறிப்பிடப்படும் விதமாக, எல்லா நேரத்திலும், தகவல்களை கலெக்ட் செய்யும்போது, பெற்றுக் கொள்ளும்போது, வைத்திருக்கும்போது, உபயோகிக்கும்போது பிராஸஸ் செய்யும்போது, ரெகார்டிங், ஸ்டோரிங், டிரான்ஸ்ஃபரிங், டீலிங், ஹேண்ட்லிங் மற்றும் வெளிப்படுத்துவது ஆகியவற்றின்போது IT சட்டத்தின் நியதிகளை முழுமையாக கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட மூன்றாந் தரப்பு பார்ட்டி மற்றும் டீம் மெம்பர்கள்/ஊழியர்கள்/அலுவலர்கள் IT சட்டத்தின் ஏதாவது ஒரு பிரிவுக்கு புறம்பாக நடக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறார்கள். ஒருவேளை IT சட்டத்தின் ஏதாவது ஒரு பிரிவுக்கு புறம்பாக அவர் நடந்தாரென்றால் அத்தகைய நடத்தைக்கு, செயலுக்கு அவரே முழு பொறுப்பாளியாவார் மற்றும் அவர்மீது நடப்பிலுள்ள சட்டத்தின் கீழ் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பாலிஸியில் மாற்றங்கள்
இந்த பாலிஸியில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அவ்வப்போது பாலிஸியை அப்டேட் செய்வதற்கு, மாற்றுவதற்கு அல்லது திருத்துவதற்கான அதிகாரத்தை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த பாலிஸி அத்தகைய அப்டேட்ஸ், மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.
இந்த பாலிஸியை அப்டேட் செய்து அத்தகைய மாற்றங்கள் குறித்து பாலிஸியில் செய்யப்பட்டிருக்கும் எல்லா மாற்றங்கள் குறித்தும் வெப்ஸைட்டில் போஸ்ட் செய்வோம்.
இந்த பாலிஸியை நடைமுறைக்கு கொண்டு வருவதோடு இன்போ தொடர்பான பொருந்தக்கூடிய UIL அந்தரங்க வழிகாட்டுதல்கள் அல்லது நடைமுறைகள் இந்த பாலிஸியின் நிபந்தனையின்படி மாற்றியமைக்கப்பட்டு அதற்கேற்ப திருத்தம் செய்யப்படும். அதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு எல்லா தரப்பினருக்கும் பாலிஸி நடைமுறைக்கு வரும் தேதி குறித்து தகவல் அனுப்பப்படும்.
இந்த பாலிஸியில் உபயோகிக்கப்படும் ஏதாவது நிபந்தனைகள் அல்லது விளக்கங்கள் தெளிவற்றதாக இருந்தால், IT சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் விளக்கங்கள் பொருந்தும்.
உங்கள் விருப்பங்கள் மற்றும் பிரைவஸி விருப்பங்களை தேர்ந்து கொள்ளுதல்
எங்கள் புராடக்டுகளுக்கு பொருந்தக்கூடிய பல்வேறு வகையிலான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான விருப்பத் தேர்வு வசதியை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். நீங்கள் புதிய மாடல்கள், வரவிருக்கும் புராடக்டுகள் போன்ற ஒருசில புராடக்ட் பற்றிய தகவல்களையும், ஆஃபர்கள், சேல், டிஸ்கவுன்ட் அல்லது மார்க்கெட் ரிஸர்ச்சில் பங்கேற்பு அல்லது நியதிகளில் மறுபரிசீலனை போன்ற பொதுவான தகவல்களையும் பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் ஸப்ஸ்க்ரைப் செய்யலாம். எங்கள் பொதுவான தகவல்களை நீங்கள் அஞ்சல், இமெயில், டெலிபோன் அல்லது மொபைல் டிவைஸில் பெற்றுக் கொள்வதற்கான சாய்ஸை நாங்கள் உங்களுக்கு அளிப்போம்.
ஸப்ஸ்க்ரிப்ஷன் கம்யூனிகேஷனில் இமெயில், நியூஸ்லெட்டர் போன்றவையும் உள்ளடங்கும், அதை நீங்கள் பெற்றுக் கொள்ள கோரிக்கை விடுக்கலாம் அல்லது அவற்றை பெறுவதற்கு ஒப்புதலை அளிக்கலாம். அத்தகைய தகவல்களைப் பெறுவதற்கான உங்கள் கோரிக்கைகளுக்குப் பிறகு, கீழ்க்கண்ட ஏதாவது ஒரு வழிமுறைகளை பயன்படுத்தி அவற்றை பெறுவதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளலாம்.
இமெயில் “ ஆப்ட் அவுட்” அல்லது “ அன்ஸப்ஸ்க்ரைப் “ லிங்க்கை ஸெலக்ட் செய்து அல்லது ஒவ்வொரு இமெயில் ஸப்ஸ்க்ரிப்ஷன் கம்யூனிகேஷனிலும் சேர்க்கப்பட்டுள்ள ஆப்ட்-அவுட் விதிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்.
மொபைல் டிவைஸ்களில் டெலிவரி செய்யப்படும் மெஸேஜ்களை அன்ஸப்ஸ்க்ரைப் செய்வதற்கு “ STOP” அல்லது “END” வார்த்தைகளுடன் கூடிய மெஸேஜ்களுக்கு ரிப்ளை செய்யவும்.
இனி மேற்கொண்டு பெற விரும்பாத எங்கள் ஸப்ஸ்க்ரிப்ஷனில் உங்கள் பெயர், பொருத்தமான கான்டாக்ட் விவரங்கள் மற்றும் குறிப்பிட்ட ஏற்புடைய தகவல்களை அளிக்கப்படுவதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்
குறிப்பிட்ட சில ஸப்ஸ்க்ரிப்ஷன்களை பெறுவதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளும்போது UIL-ல் இருந்த பெற்றுக் கொள்வதற்காக நீங்கள் தேர்வு செய்து கொண்ட சர்வீஸ்கள் பாதிக்கப்படக் கூடும். இதில் சர்வீஸ்களை பெற்றுக் கொள்வதற்கு தகவல்களை பெற்றுக் கொள்வதும் ஒரு நிபந்தனையாகும்.
இந்த ஆப்ஷன், ஆர்டர் செய்வதை பூர்த்தி செய்வது, கான்ட்ராக்டுகள்,ஸப்போர்ட், புராடக்டின் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அல்லது வேறு இதர நிர்வாக மற்றும் டிரான்ஸாக்ஷனல் போன்ற முக்கிய நோக்கங்களுக்கு பொருந்தாது. இங்கே இந்த தகவல் தொடர்பின் முக்கிய நோக்கம் புரொமோஷனல் நோக்கத்தைக் கொண்டிருக்காது.